/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு சங்க பிரச்னையால் பாதிப்பு : தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
/
கூட்டுறவு சங்க பிரச்னையால் பாதிப்பு : தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
கூட்டுறவு சங்க பிரச்னையால் பாதிப்பு : தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
கூட்டுறவு சங்க பிரச்னையால் பாதிப்பு : தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
ADDED : ஏப் 11, 2024 11:56 PM

உடுமலை;உடுமலை அருகே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பிரச்னைக்கு தீர்வு காணப்படாததைக்கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கருப்பு கொடி ஏற்றி, தேர்தல் புறக்கணிப்பு பலகை வைக்கப்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டிபுதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் செலுத்திய பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தொகை, கூட்டுறவு சங்க அலுவலர்களால் முறைகேடு செய்யப்பட்டது.
இதற்கான ரசீதும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இதையடுத்து, ரசீது வழங்காத விவசாயிகளுக்கு உடனடியாக ரசீது வழங்கப்படும்; பயிர்க்கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், விருகல்பட்டிபுதுாரில், கருப்புக்கொடி ஏற்றினர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாததால், தேர்தலை புறக்கணிப்பதாகவும், தகவல் பலகை வைக்கப்பட்டது.
தகவல் பலகையில், 'தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், இயக்குனர்கள், செயலாளர், உதவி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காததது மற்றும் மறுபயிர் கடன் வழங்காத அரசைக்கண்டித்து தேர்தலை புறக்கணிக்கிறோம்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

