/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் இலக்கிய கருத்தரங்கம்
/
அரசு கல்லுாரியில் இலக்கிய கருத்தரங்கம்
ADDED : ஏப் 02, 2024 10:27 PM
உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை அருகே எலையமுத்துார் பிரிவில், அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்த்துறையின் சார்பில் 'திறனாய்வுக் கொள்கைகளும் படைப்புகளை வாசித்தலும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மதியழகன், பேராசிரியர் வேலுமணி வரவேற்றனர். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.
கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லுாரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் வேணுகோபால், திறனாய்வு கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடு குறித்தும், உளவியல், தத்துவம், பெண்ணியம் குறித்து விளக்கமளித்து பேசினார். கல்லுாரியின் தமிழ்த்துறை மாணவர்கள், இலக்கியம் குறித்து பல்வேறு சந்தேகங்களை கேட்டு, தெரிந்து கொண்டனர்.
இந்த இலக்கிய கருத்தரங்கில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

