/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 13, 2024 08:43 AM

உடுமலை, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் நடந்தது. சங்கத்தின் புதிய தலைவராக, குருசாமி தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே தலைவராக இருந்த லோகேஸ்வரி, புதிய தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.விழாவில் டாக்டர்கள் சுந்தர்ராஜன், மோகன் பிரசாத், பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அரசு பள்ளிகளக்கு புத்தகங்கள் கொண்ட அலமாறி நுாலகமாக வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் ஹாக்கிப் போட்டியில், வெற்றி பெற்ற பெதப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர் களுக்கு விளையாட்டு சீருடைக்கான தொகை வழங்கப்பட்டது.
உடுமலை இரண்டாம் கிளை நுாலகத்துக்கு, மருத்துவ புத்தகங்கள் வழங்கப்பட்டன. பிரியா மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லுாரி சேவையை பாராட்டி, அதன் முதல்வர் தவசுமணிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் ரோட்டரி சங்க நிர்வாகி சக்ரபாணி தொகுத்து வழங்கினார். சங்க புதிய செயலாளர் சுப்ரமணியம் நன்றி தெரிவித்தார்.

