/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு தயாராகின்றன இலவச சைக்கிள்கள்
/
மாணவர்களுக்கு தயாராகின்றன இலவச சைக்கிள்கள்
ADDED : ஜூலை 22, 2024 01:06 AM

திருப்பூர்;பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
தொலைதுாரத்தில் இருந்து பள்ளிக்கு வருவோருக்கு பயணம் எளிதாக, பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு அரசு இலவசமாக சைக்கிள் வழங்குகிறது.
நடப்பு கல்வியாண்டு வழங்க வேண்டிய சைக்கிள்களின் உதிரிபாகங்கள், சென்னையில் இருந்து ஜூன் துவக்கத்தில் திருப்பூர் அனுப்பி வைக்கப் பட்டது.
இதனை பிரித்து, டயர், டியூப், ரிம், ேஹண்டில்பார், சீட், பெடல் உள்ளிட்டவற்றை சைக்கிளில் பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சைக்கிள் உதிரிபாகம் பொருத்தும் பணியில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகள் முடிவு பெற்றதும் தாலுகா வாரியாக, பள்ளிகளுக்கு சைக்கிள்கள் அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

