/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுப்பஞ்சு விலை விவசாயிகள் கவலை
/
கழிவுப்பஞ்சு விலை விவசாயிகள் கவலை
ADDED : மார் 22, 2024 11:00 PM
பொங்கலுார்:கழிவுப்பஞ்சை விவசாயிகள் நிலத்திற்கு அடி உரமாக இடுவர். அப்போது விலை மலிவாக கிடைத்தது. பின், தொடர் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கழிவுப்பஞ்சை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.
தற்பொழுது அடிக்கடி வறட்சி ஏற்படுவதால் கழிவு பஞ்சு இல்லாமல் கால்நடைகளை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேய்ச்சல் நிலங்களில் பசும்புற்கள் இருந்த பொழுது கழிவுப்பஞ்சுக்கு தேவை குறைவாக இருந்தது.
அப்போது ஒரு கிலோ, 19 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு மழை இன்றி வறண்ட வானிலை காணப்படுவதால் புல்வெளிகள் காய்ந்து விட்டன. எனவே, கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பல விவசாயிகள் அதிக அளவில் கழிவுப் பஞ்சுகளை வாங்க துவங்கினர். இதனை தொடர்ந்து தற்போது கழிவு பஞ்சின் விற்பனை விலை, 21 ரூபாயாக உயர்ந்துள்ளது. வறட்சி மேலும் அதிகரித்தால் விலை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

