/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சிக்கு இடையே பூமியை மறந்து விடக்கூடாது! வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
/
வளர்ச்சிக்கு இடையே பூமியை மறந்து விடக்கூடாது! வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
வளர்ச்சிக்கு இடையே பூமியை மறந்து விடக்கூடாது! வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
வளர்ச்சிக்கு இடையே பூமியை மறந்து விடக்கூடாது! வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 02, 2024 10:41 PM
பல்லடம்;''வளர்ச்சிக்கு இடையே பூமியை மறந்து விடக்கூடாது'' என, பல்லடம் வனம் அமைப்பின் வான்மழை கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் வனம் அமைப்பு சார்பில் வான்மழை மாதாந்திர கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
திருவனந்தபுரம் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுகவுன்சில் - தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடை நிறுவன் (சி.எஸ்.ஐ.ஆர்., -- என்.ஐ.ஐ.எஸ்.டி.,) இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் பேசியதாவது:
பால் உற்பத்தியில் நம் நாடு உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. கோதுமை, அரிசி உள்ளிட்டவை கடந்த காலங்களில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வோம்.
இச்சூழலில், அறிவியல் ஆராய்ச்சியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படி புதிய பயிர்கள் உற்பத்தி துவங்கியது.
நம்மில் எத்தனை பேர் அறிவியல் ஆராய்ச்சிகளை பாராட்டுகிறோம்? நம் முந்தைய தலைமுறையினர் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பினர். இன்றுள்ள தலைமுறையினர் அதே கட்டமைப்பை இங்கு கொண்டுவர முயன்று வருகின்றனர்.
இதற்கு கோவை, திருப்பூரின் வளர்ச்சியே உதாரணம். நமது தொழில்நுட்பத்தை வெளிநாட்டினர் பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் உருவாகி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்ததில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த வேகமான வளர்ச்சிக்கு இடையே இந்த பூமியை மறந்து விடக்கூடாது.
நமக்கே தெரியாமல் தினசரி ஏராளமான தவறுகளை இந்த பூமிக்கு நாம் செய்து வருகிறோம். அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதில் உலகில், 4வது இடத்தில் இந்தியா உள்ளது. பயன்படுத்திய எரிசக்தியை மீண்டும் பயன்படுத்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.
எதனை நாம் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து வேண்டாததை சாப்பிட்டு வருகிறோம். சந்தோஷத்துக்காக சாப்பிடுவோமே தவிர, நமது உடலுக்கு எது தேவை என்பதை உணர்ந்து சாப்பிடுவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

