/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
/
சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
ADDED : ஏப் 05, 2024 12:18 AM

பல்லடம்;பல்லடம் அருகே சொக்கம்பாளையம், கல்லுக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில், வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில், தேவகோட்டையைச் சேர்ந்த முருகன், 46 என்பவர் வசித்து வருகிறார்.
வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து மோட்டார் பயன்படுத்தி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்குள் எரிவாயுவை மாற்றி, விற்பனை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் சிலிண்டரில் இருந்து வாயுவை மாற்றும்போது, பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் மேற்கூரை சுக்குநுாறாக நொறுங்கியது. விபத்தில், முருகன் மற்றும் உடன் வேலை பார்த்து வந்த தென்காசியை சேர்ந்த செல்வகணேஷ், 26 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

