/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளருக்கு வழங்க சர்க்கரை - உப்பு நீர் கரைசல்
/
வாக்காளருக்கு வழங்க சர்க்கரை - உப்பு நீர் கரைசல்
ADDED : ஏப் 17, 2024 12:23 PM
திருப்பூர்: வெயில், 100 டிகிரி பதிவாகி வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் நான்கு டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஓட்டுப்பதிவு நாளில், ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு தேவையான உடல்நலம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை துவக்க, மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது அதில், அதிக வாக்காளர்களை கொண்ட, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை தனியே பிரித்துக் கொள்ள வேண்டும்.
பத்து முதல், 30 ஓட்டுச்சாவடிக்கு ஒரு முன்னெச்சரிக்கை மருத்துவக்குழு, சுகாதாரக்கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவினர், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உப்பு - சர்க்கரை கலந்த ஓ.ஆர்.எஸ்., கரைசல்களை வாக்காளர்களுக்கு வழங்குவர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் வந்தால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வர்.
யாருக்காவது உடல் நலக்குறைவு அல்லது மயக்கம் ஏற்பட்டால், உடனடியாக அவ்விடத்துக்கு, 108 ஆம்புலன்ஸ் கொண்டு வர தயார் நிலையில், அருகிலேயே, ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கடந்த, 2021 சட்டசபை தேர்தல் கொரோனா பரவலின் போது நடந்த தேர்தலாக இருந்தது. முன்னெச்சரிக்கை கருதி ஓட்டுச்சாவடி மையங்களில் முககவசம், கையுறை வழங்கப்பட்டது.
'சானிடைசர்' மூலம் கைகளை கழுவி விட்டு, ஓட்டுச்சாவடிக்குள் வந்து ஓட்டுப் போட்டு சென்றனர்.கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா பாதிப்பு இல்லை. இதனால், லோக்சபா தேர்தல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதுமில்லை.

