/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இல்ல விழா, பண்டிகையில் மட்டும் குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பு
/
இல்ல விழா, பண்டிகையில் மட்டும் குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பு
இல்ல விழா, பண்டிகையில் மட்டும் குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பு
இல்ல விழா, பண்டிகையில் மட்டும் குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பு
ADDED : செப் 16, 2024 12:13 AM

அவிநாசியில் வசிப்பவர்கள் செந்தில்குமார், -45; கட்டட கம்பி சென்ட்ரிங் மேஸ்திரி. இவரது மனைவி கிருஷ்ணவேணி, 42, தலைமைக்காவலர்.
செந்தில்குமார் கூறியதா வது: மனைவி போலீஸ் வேலையில் உள்ளதால் பகல் - இரவு என டூட்டி மாறி மாறி வரும். இதனாலேயே அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து சமையலை முடித்துவிடுவார். மகள் ஏழாம் வகுப்பு, மகன் பிளஸ் 2 படிக்கின்றனர். மகன் ஸ்பெஷல் கிளாஸ் என முடிந்து வருவதற்கு நேரம் ஆகும். மகள் மாலை 4:30 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார். இதனாலேயே சென்ட்ரிங் வேலையை அவிநாசி சுற்றுவட்டார பகுதியிலேயே எடுத்து வேலை செய்து வருவேன். மகள் வீட்டில் இருப்பாள் என்பதால் அடிக்கடி வந்து பார்த்துச் செல்ல வேண்டி உள்ளது.
மனைவிக்கு வெளியூர், வெளி மாவட்டங்கள் என 'டூட்டி' போடும்போது மிகுந்த சிரமம் ஏற்படும். அப்போதெல்லாம் தனியாக குழந்தைகளை கவனித்து சமையல் செய்து அவர்களை பள்ளிக்கு புறப்பட செய்து நானும் வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். குழந்தைகளுடன் சரிவர பேசவும் முடியாமல் அவர்களுடன் நேரம் செலவிட முடியாமல், இல்ல விழாக்கள், பண்டிகை என வரும்போது மட்டுமே குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பு அமையும்.

