/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 நாள் கோவை செல்லாது
/
6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 நாள் கோவை செல்லாது
ADDED : ஜூலை 22, 2024 08:15 PM
திருப்பூர்;கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நாளை (24 ம் தேதி) மற்றும் வரும், 28 ம் தேதி நடக்கிறது. இதனால், திருப்பூர் - கோவை வழியாக செல்லும் சில ரயில்கள் இருகூர் - போத்தனுார் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் - மங்களூரு ரயில் (எண்:16159) மேற்கண்ட நாட்களில் பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது.
பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22644), திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்: 22504), சில்சார் - திருவனந்தபுரம் (எண்:12508), புதுடில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12626), பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12677) ஆகிய ரயில்கள் கோவை ஜங்ஷன் செல்லாது. கூடுதலாக போத்தனுாரில் நிற்கும்.
ஈரோடு - கோவை பாசஞ்சர் (எண்:06801) இருகூர் வரை மட்டும் இயங்கும். சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது. வரும், 24 மற்றும், 28 ம் தேதி இவ்வழித்தடம் மாற்றம் அமலில் இருக்கும்.

