/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் வரத்து குறைவு தக்காளி கிலோ 30 ரூபாய்
/
மழையால் வரத்து குறைவு தக்காளி கிலோ 30 ரூபாய்
ADDED : மே 23, 2024 04:28 AM
திருப்பூர்: கடந்த பத்து நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பதிவாகி வருவதால், விளைந்து, பறிக்கும் நிலையில் இருந்த தக்காளிகள் சேதமடைய துவங்கியுள்ளது.
குறிப்பாக, தோட்டங்களில் செடிகளில் இருந்து தக்காளி கனிந்து, அடிபட்ட நிலைக்கு வந்து விடுவதால், அவற்றை தரம்பிரித்து கூடைகளில் அடுக்கிக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஒவ்வொரு தோட்டங்களில் இருந்தும், திடீரென மூன்றில் ஒரு பங்கு வரத்து குறைந்துள்ளது. ஒரே நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்து இரண்டும் சரிந்ததால், தக்காளிக்கு மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம், 14 கிலோ கொண்ட சிறிய கூடை, 200 முதல், 250 ரூபாயாக இருந்தது.
நேற்று, கூடைக்கு 50 முதல், நுாறு ரூபாய் விலை உயர்ந்து, 350 முதல், 450 ரூபாயாகியுள்ளது. 28 கிலோ பெரிய கூடை தக்காளி, 600 முதல், 650 ரூபாய் இருந்தது; தற்போது, 850 முதல், 900 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிலோ, 20 முதல், 25 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, மார்க்கெட்டிலேயே சில்லறை விலையில் கிலோ, 35 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

