/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நர்ஸ் பலாத்காரம் டாக்டர் சிக்கினார்
/
நர்ஸ் பலாத்காரம் டாக்டர் சிக்கினார்
ADDED : ஏப் 19, 2024 12:44 AM
ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் கிளினிக்கை, டாக்டர் ரவி, அவரது மகன் டாக்டர் நிவேந்தன், 32, நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன், அங்கு பணியாற்றி வந்த பேர்ணாம்பட்டை சேர்ந்த, 25, வயது நர்ஸ் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
போலீசார் விசாரணையில், டாக்டர் நிவேந்தன் பாலியல் பலாத்காரம் செய்ததால், தற்கொலைக்கு முயன்றதாகவும் நர்ஸ் கூறினார்.
உமாரபாத் போலீசார், தலைமறைவாக இருந்த நிவேந்தனை தேடி வந்தனர். நர்ஸ் தரப்பினர், எஸ்.பி., ஆல்பர்ட் ஜானை சந்தித்து, நிவேந்தனை கைது செய்ய வலியுறுத்தினர். தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, ஆரணியில் பதுங்கியிருந்த டாக்டர் நிவேந்தனை போலீசார் கைது செய்தனர்.

