/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மின் ஊழியர்களுக்கு 'டிடெக்டர் ஹெல்மெட்'
/
மின் ஊழியர்களுக்கு 'டிடெக்டர் ஹெல்மெட்'
ADDED : மே 19, 2024 01:54 AM

வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில், மின் ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, 'வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்' கருவி பொருத்திய ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
மின் ஊழியர்கள், மின்கம்பங்களில் ஏறி பணிபுரியும் போது, மின் வினியோகத்தை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினாலும் மின் கசிவு ஏற்படுகிறது. இதனால், ஊழியர்கள் கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறும் போது, மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இதைத்தடுக்க, தமிழகம் முழுதும் உள்ள மின் ஊழியர்களுக்கு, வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவி வழங்கப்பட்டு வருகிறது.
இவை, மின்கம்பத்தில் மின் கசிவு இருந்தால், 3 அடி துாரத்திற்கு முன்பாகவே, சத்தம் எழுப்பி எச்சரிக்கும். இதன் வாயிலாக, மின் ஊழியர்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.
வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவியை, கையில் வாட்ச் போலவும் கட்டிக் கொள்ளலாம், அல்லது ெஹல்மெட்டிலும் பொருத்தி கொள்ளலாம்.
இந்த சென்சார் கருவியுடன் கூடிய ெஹல்மெட், திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதி துணை மின்நிலைய களப்பணியாளர், 120 பேருக்கு வழங்கப்பட்டு நேற்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

