ADDED : ஆக 14, 2025 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார், 43. அதே கிராமத்தை சேர்ந்த மாரீஸ்வரி, தன் தாத்தா, பாட்டி இறப்பை பதிவு செய்ய, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதற்காக, ஈராச்சி வி.ஏ.ஓ., செந்தில்குமாரை, அணுகிய போது, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
மாரீஸ்வரி துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலக த்தில் புகார் அளித்தார். செந்தில்குமாரிடம் நேற்று மாரீஸ்வரி 3,500 ரூபாயை கொடுத்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர். செந்தில்குமார் லஞ்ச வழக்கில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

