/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது
/
அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது
அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது
அரசு பஸ்சில் குட்கா கடத்தல் நடத்துனர் உட்பட மூவர் கைது
ADDED : நவ 24, 2024 02:11 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து ரோந்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
பெங்களூருவில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சில் சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. புகையிலை பொருட்கள், அவற்றை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட் ஆட்டோ, அரசு விரைவு பேருந்து ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு பஸ் நடத்துநரான நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், 40, ஆட்டோ டிரைவர் அகஸ்டின்ராஜ், 32, ராமசுப்பு, 65, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.