/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
4 மாதமாக சம்பளம் இல்லை அரசு அதிகாரி தற்கொலை
/
4 மாதமாக சம்பளம் இல்லை அரசு அதிகாரி தற்கொலை
ADDED : பிப் 08, 2024 01:52 AM
கழுகுமலை:துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், நான்கு மாதம் சம்பளம் வராததால், வேளாண் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி, 43. இவர், பழனியில் வேளாண்மை துறை உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.
பின், பதவி உயர்வில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் வேளாண் உதவி அலுவலராக, 2023 செப்டம்பரில் பொறுப்பேற்றார்.
மனைவி செல்வப்பிரியா, 36, மகன் கிஷோர், 17, மகள் பிரினிதா, 18, ஆகியோர் பழனியில் வசிக்கின்றனர்.
கழுகுமலையில் வசித்த தண்டாயுதபாணி பணிக்காக குருவிகுளம் சென்று வந்தார். செப்டம்பருக்கு பிறகு அவருக்கு அரசு சம்பளம் வரவில்லை.
இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வாடகை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கழுகுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

