ADDED : பிப் 28, 2024 01:22 AM
தூத்துக்குடி:துாத்துக்குடியில் வாலிபரை தாக்கி மொபைல் போன் மற்றும் ஜி பே மூலம் 74 ஆயிரம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி சிலுவைப்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி ரிச்சன் 21. தனியார் நிறுவன ஊழியர். கடந்த 25ம் தேதி டூவீலரில் சென்றபோது வழிமறித்த நான்கு பேர் கும்பல் அவரை தாக்கி மொபைல் போனை பறித்தனர். பின்னர் அவரது மொபைல் ஜீ பேயில் இருந்து 74 ஆயிரத்து 500ஐ மிரட்டி அனுப்ப செய்தனர்.
விசாரித்த போலீசார் இது தொடர்பாக தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த முத்து செல்வம் 23, அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த மகாராஜா 23, சஞ்சய் 20 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன் மற்றும் 74 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

