/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது உடல் நலம் பாதித்து இறந்ததாக நாடகம்
/
தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது உடல் நலம் பாதித்து இறந்ததாக நாடகம்
தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது உடல் நலம் பாதித்து இறந்ததாக நாடகம்
தகராறு செய்த மகனை கொன்ற தந்தை கைது உடல் நலம் பாதித்து இறந்ததாக நாடகம்
ADDED : ஜூலை 24, 2025 12:25 AM

துாத்துக்குடி:குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்து விட்டு நாடக மாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி, 52. கடலையூர் சாலையில் சிமென்ட் கடை நடத்துகிறார்.
இவரது மகன் தர்மதுரை, 23, கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தர்மதுரை சரியாக வேலைக்கு செல்லாமல் பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார் என கூறப்படுகிறது.
கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்த தர்மதுரை உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கியதாக கூறி மருத்துவமனைக்கு மருதுபாண்டி அழைத்து சென்றார்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், தர்மதுரை மூச்சு விட முடியாமல் அமுக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நாலாட்டின்புத்துார் போலீசார், தந்தை மருதுபாண்டியை கைது செய்தனர்.
ஜாமின்
அவர்கள் கூறியதாவது:
கடந்த 2024ல் ஒரு சிறுவனிடம் தவறாக நடக்க முயன்ற தர்மதுரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர் வெளியூர் சென்ற நிலையில், 17ம் தேதி வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி நீதிமன்றத்திற்கு வந்தார்.
அதன்பின் வீட்டில் இருந்த தர்மதுரை குடிபோதையில் பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்தார். 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்த மருதுபாண்டியிடம், குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த தர்மதுரை அவரை தாக்க முயன்றார்.
விசாரணை
ஆத்திரமடைந்த மருதுபாண்டி, மகன் தர்மதுரையை கீழே தள்ளிவிட்டு, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததால் தர்மதுரை உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்ததாக நாடகமாடினார். மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

