/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பைக் மீது வேன் மோதி எல்லை வீரர் உயிரிழப்பு
/
பைக் மீது வேன் மோதி எல்லை வீரர் உயிரிழப்பு
ADDED : டிச 14, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 49; பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன், விடுமுறையில் ஊருக்கு வந்த பாலமுருகன், மெஞ்ஞானபுரத்தில் உள்ள மனைவி சரணிகா, குழந்தையை பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு பைக்கில் விளாத்திகுளம் புறப்பட்டார்.
தருவைகுளம் பகுதியில் எதிரே வந்த வேன், பைக் மீது மோதியதில் பாலமுருகன் உயிரிழந்தார்.
தருவைகுளம் போலீசார், வேன் டிரைவரான துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கொம்பையா, 35, என்பவரை கைது செய்தனர்.

