/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொழிலாளி மர்ம சாவு உறவினர்கள் மறியல்
/
தொழிலாளி மர்ம சாவு உறவினர்கள் மறியல்
ADDED : ஏப் 23, 2024 09:14 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் வெங்கடேஸ்வரன், 22, கட்டட தொழிலாளி. இவர், நேற்று தீத்தாம்பட்டி - சிவந்திபட்டி சாலையில் உள்ள பாலம் அருகே மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடல் அருகே மது பாட்டில், விஷ பாட்டில் இருந்தன. கொப்பம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
அவர், கரிசல் குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வெங்கடேஸ்வரனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. வெங்கடேஸ்வரன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு வெங்கடேஸ்வரனின் உறவினர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.

