/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் முருகன் கோயிலில் நயினார் நாகேந்திரன் பூஜை
/
திருச்செந்துார் முருகன் கோயிலில் நயினார் நாகேந்திரன் பூஜை
திருச்செந்துார் முருகன் கோயிலில் நயினார் நாகேந்திரன் பூஜை
திருச்செந்துார் முருகன் கோயிலில் நயினார் நாகேந்திரன் பூஜை
ADDED : மார் 24, 2024 02:34 AM

துாத்துக்குடி:நெல்லை லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக தற்போதையை நெல்லை எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்து, தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தினார்.
பின், அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணமே, தி.மு.க.,வுக்கு கிடையாது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது. கடந்த தேர்தலில் அனைத்து பெண்களுக்கும், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர். பின், தகுதியுடையவர்களுக்கு மட்டுமே என்றனர்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை, 3000 ரூபாய் வழங்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டு உள்ளனர். அதை, நாங்களே கொடுத்து விடுவோம். காங்கிரஸ் தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், தி.மு.க., விடம் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.,வை இரண்டாவது இடத்திற்கு கூட வரவிடக்கூடாது என, கனிமொழி எம்.பி., கூறி உள்ளார். அதை மக்கள் சொல்ல வேண்டும்.
அமலாக்கத்துறை எல்லோர் வீட்டிற்கும் செல்லாது, சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு தான் செல்லும். மக்களுக்கு மாநில அரசால் சில விஷயங்களை தான் செய்ய முடியும். மத்திய அரசால் அதிக விஷயங்களை செய்யலாம் என்பதால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

