/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பால தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து; உரிமையாளர் பலி
/
பால தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து; உரிமையாளர் பலி
பால தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து; உரிமையாளர் பலி
பால தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து; உரிமையாளர் பலி
ADDED : ஏப் 28, 2024 11:21 PM

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 60. சொந்தமாக லாரி ஓட்டி வந்தார்.
நேற்று திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு பழைய பேப்பர் பாரம் ஏற்றிச் சென்றார். அதிகாலை 4:00 மணிக்கு இனாம் மணியாச்சி மேம்பாலம் அருகே லாரி சென்ற போது திடீரென நிலை தடுமாறி மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது. உயிர் தப்ப ராமகிருஷ்ணன் கீழே குதித்தார். இருப்பினும் டயருக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தார். கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரித்தனர். தூக்க கலக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.