/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
/
முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
ADDED : மே 19, 2024 02:12 AM
திருநெல்வேலி: துாத்துக்குடியில் மீன்வள பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுகுமார் 64, மறைந்த கால்நடைத்துறை ஓய்வு உதவி இயக்குனர் ரஞ்சன் சுந்தரகுமார் வீடுகளில் பூட்டை உடைத்து 113 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சின்னமணிநகரைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி புனிதா 56, தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர்கள் குடும்பத்தினருடன் மே 10 சென்னை சென்றனர். நேற்று காலை சுகுமாரின் வீட்டை பராமரிக்க வந்த பெண், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தென்பாகம் போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர். பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
உதவி இயக்குனர் வீட்டிலும் கொள்ளை: திருநெல்வேலியை சாந்திநகரைச் சேர்ந்தவர் ரஞ்சன் சுந்தரகுமார். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது வீட்டில் மனைவி இந்திரா 55, தனியாக வசித்து வந்தார். இரவில் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விடுவார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதில் ஈடுபட்டவர்களை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

