/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
ஜே.சி.பி., மீது கார் மோதல் வாலிபர் பலி
/
ஜே.சி.பி., மீது கார் மோதல் வாலிபர் பலி
ADDED : செப் 01, 2025 05:55 AM
திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து நேற்று முன்தினம் இரவு, கார் ஒன்று திருவாரூர் நோக்கி வந்தது. ஹரிகரன், 21, என்ற வாலிபர் காரை ஓட்டினர்.
காட்டூர் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது, சாலையோரம் நின்ற ஜே.சி.பி., மீது கார் மோதியது.
இதில், காரில் இருந்த மடப்புரம் கணேசமூர்த்தி, 20, சம்பவ இடத்தில் இறந்தார். டிரைவர் உட்பட, 19 முதல், 22 வயதுடைய எட்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.அக்கம்பக்கத்தினர், இவர்களை, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துளசி, 22, என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். நண்பர் பிறந்த நாள் விழாவிற்கு, சென்று திரும்பிய போது, இந்த விபத்து நடந்துள்ளது.