/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மயிலம் அருகே தீப்பிடித்தது சிமென்ட் லாரி
/
மயிலம் அருகே தீப்பிடித்தது சிமென்ட் லாரி
ADDED : ஆக 17, 2025 02:22 AM

மயிலம்:மயிலம் அருகே டாரஸ் லாரி, மையத்தடுப்பில் மோதி தீப்பிடித்தது.
திருவாரூர் மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் பிரபு, 28, லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை, அரியலுார் மாவட்டத்தில் இருந்து டாரஸ் லாரியில், சிமென்ட் லோடு ஏற்றி, சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
புதுச்சேரி திருக்கனுாரில் உள்ள பெட்ரோல் பங்க்கில், டீசல் நிரப்பி, மயிலம் வழியாக சென்னைக்கு புறப்பட்டார். அதிகாலை, 3:00 மணிக்கு கூட்டேரிப்பட்டு நெடுஞ்சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, மையத்தடுப்பில் மோதியது.
இதில், டீசல் டேங்க் உடைந்து, லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே டிரைவர், லாரியில் இருந்து குதித்து தப்பினார்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில், 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதித்தது.