/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்துகளை தடுக்க வேகத்தடை நெ.சா.துறை நடவடிக்கை எடுக்குமா?
/
விபத்துகளை தடுக்க வேகத்தடை நெ.சா.துறை நடவடிக்கை எடுக்குமா?
விபத்துகளை தடுக்க வேகத்தடை நெ.சா.துறை நடவடிக்கை எடுக்குமா?
விபத்துகளை தடுக்க வேகத்தடை நெ.சா.துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஆக 31, 2025 11:52 PM

பொன்னேரி:ஆற்றுப்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், இணைப்பு சாலை வழியாக செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், அங்கு வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் - குண்ணம்மஞ்சேரி இடையே உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே, 2018ல் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. குண்ணம்மஞ்சேரி, ஏலியம்பேடு, பெருவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதிகளில், பொன்னேரி நோக்கி வரும் வாகனங்கள், ஆற்றுப்பாலத்தை கடந்து இணைப்பு சாலையில் வேகமாக செல்கின்றன. இந்த இணைப்பு சாலையானது, பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் முடிகிறது.
இவ்வாறு வேகமாக வரும் வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஆற்று பாலத்தின் இணைப்பு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.