/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
அகூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
அகூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
அகூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : நவ 07, 2025 12:08 AM
திருத்தணி: ஊராட்சியில் நிர்வாகம் மெத்தனத்தால், கடந்த மூன்று மாதங்களாக அகூர் பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் பெண்கள் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சியில் அகூர் கிராமம், காலனி, இருளர் காலனி, அருந்ததி காலனி, நத்தம் மற்றும் பி.எம்.புரம், எம்.ஜி.ஆர்.,நகர் ஆகிய பகுதிகளில், 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், 9 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், 10 ஆழ்துளை கிணறுகள் அமைத்து தெருக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக, மூன்று ஆழ்துளை கிணறுகளில் இருந்த மின்மோட்டார் மாயமானது. மேலும் இரண்டு மின்மோட்டார்கள் பழுதாகி, ஆறு மாதங்கள் ஆகியும் சீரமைக்கவில்லை. தற்போது, ஐந்து ஆழ்துளை கிணறுகள் மூலம், குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் சீரான முறையில் வீடுகளுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக அகூர் கிராமத்தில், 200 வீடுகளுக்கும் கடந்த மூன்று மாதமாக குடிநீர் சீரான வினியோகம் செய்ய வில்லை. இதனால் குடிநீருக்காக பெண்கள் அவதிப்படுகின்றனர். அகூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அகூரில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்திரமாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

