/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரு வாலிபர்கள் கைது
/
நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரு வாலிபர்கள் கைது
ADDED : அக் 24, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது குறித்த இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் வீடியோ பரவி வந்தது.
எஸ்.பி., விவேகானந்தாசுக்லா உத்தரவின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடம்பத்துார் அடுத்த சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரீஷ், 19 மற்றும் சஞ்சய் 22 என தெரிய வந்தது.
கடம்பத்துார் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

