/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது
/
11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது
ADDED : அக் 27, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஆரணி அருகே, 11 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி அடுத்த அகரம் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, சென்னை திரு.வி.க., நகரைச் சேர்ந்த அருண், 30, ராயப்பேட்டையைச் சேர்ந்த சுபீர் அஜ்மல், 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

