/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : ஆக 31, 2025 11:57 PM

திருவாலங்காடு:திருவாலங்காடில் தார்ப்பாய் மூடாமல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் அருகே, கிராவல் மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து, திருவள்ளூர் பகுதிக்கு, திருவள்ளூர்--- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மண் ஏற்றி செல்கின்றன.
அதேபோல, ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், மணல் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அதிகளவில் செல்கின்றன.
இவ்வாறு செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் வேகமாக செல்லும்போது ஜல்லிக் கற்கள், மணல் ஆகியவை சாலையில் சிதறுகின்றன. அப்போது, பின்னால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
எனவே, தார்ப்பாய் மூடாமல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, திருவாலங்காடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.