/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி: அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
/
திருவள்ளூர்: புகார் பெட்டி: அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
திருவள்ளூர்: புகார் பெட்டி: அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
திருவள்ளூர்: புகார் பெட்டி: அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
ADDED : மார் 13, 2024 10:57 PM

அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு பிரையாம்பத்து பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சுடுகாடை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டிக் கிடக்கிறது. சுடுகாடு பகுதியில் சாலை, தண்ணீர், மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லை.
இதனால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் சுடுகாடு பகுதியை சீரமைத்து தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.மாரியப்பன், திருமழிசை.