/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கீழ்மணம்பேடு சமுதாய நலக்கூடம் குப்பை கிடங்காக மாறிய அவலம்
/
கீழ்மணம்பேடு சமுதாய நலக்கூடம் குப்பை கிடங்காக மாறிய அவலம்
கீழ்மணம்பேடு சமுதாய நலக்கூடம் குப்பை கிடங்காக மாறிய அவலம்
கீழ்மணம்பேடு சமுதாய நலக்கூடம் குப்பை கிடங்காக மாறிய அவலம்
ADDED : ஜூலை 24, 2025 02:05 AM

கீழ்மணம்பேடு:பராமரிப்பு இல்லாததால் குப்பை கிடங்காக மாறிய சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்த முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி ஒன்றியம் மேல்மணம்பேடு ஊராட்சியில் கீழ்மணம்பேடு அமைந்துள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த சமுதாய நலக்கூடத்தில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2013 - 14ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. அதன்பின் வசதிகள் ஏற்படுத்தவில்லை. தற்போது, சமுதாய நலக்கூடம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சமுதாய நலக்கூடத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கீழ்மணம்பேடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

