/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் குளத்தை சுற்றி துர்நாற்றம் வீசும் அவலம்
/
கோவில் குளத்தை சுற்றி துர்நாற்றம் வீசும் அவலம்
ADDED : மே 26, 2025 11:47 PM
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியில் ஹிந்து சமய அறநிலைய துறையின் பராமரிப்பில் ஞானவேல் முருகன் கோவில் உள்ளது. கோவில் முன், பரந்து விரிந்த குளம் உள்ளது. இக்குளம், 20 ஆண்டுகளுக்கு முன் வரை முறையாக பராமரிக்கப்பட்டது. அதன்பின், குளம் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது.
குளத்தின் படித்துறை மற்றும் உட்புறத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், இடிந்து விழுந்த ஒரு பக்க சுவர், எந்த நேரத்திலும் இடியும் நிலையில் பரிதாப நிலையில் குளம் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில், குப்பை கழிவு குவிப்பது, சிறுநீர் கழிப்பது என, அசுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், குளத்தை சுற்றி துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றியுள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டில் தவித்து வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

