/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் கழிவுநீர் விட்ட டேங்கர் லாரி பறிமுதல்
/
கால்வாயில் கழிவுநீர் விட்ட டேங்கர் லாரி பறிமுதல்
ADDED : டிச 12, 2024 12:55 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் நுழைவாயில் முதல், பெத்திக்குப்பம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாயில், தனியார் டேங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.
அது நேராக, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீரும், கும்மிடிப்பூண்டி நகர் பகுதயின் நிலத்தடி நீரும் கடுமையாக மாசு அடைந்துள்ளது.
இந்நிலையில், டேங்கர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரிடம் நீர்வளத் துறையினர் புகார் தெரிவித்தனர். அதன்படி, பெத்திக்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம், மழைநீர் கால்வாயில் நேற்று, கழிவுநீர் திறந்துவிட்ட டேங்கர் லாரி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுனர் தப்பி ஓடினார். நீர்வளத் துறையினர் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

