/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவர் இல்லத்தில் மாணவர் மாயம்
/
சிறுவர் இல்லத்தில் மாணவர் மாயம்
ADDED : நவ 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பத்தில் நம்பிக்கை இல்லம் என்ற, சிறுவர் இல்லம் இயங்கி வருகிறது. அங்கு, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தங்கியிருந்து, கொப்பூர் அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவருடன் மேலும் 3 மாணவர்கள் நேற்று முன்தினம், சிறுவர் இல்லத்தின் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அன்று மாலை, 14 வயது மாணவன், தன் புத்தக பையை பள்ளியில் வைத்து விட்டு மாயமானார். சிறுவர் இல்லத்திற்கு வரவில்லை.
இதுகுறித்து, சிறுவர் இல்லத்தின் மேற்பார்வையாளர் அருண் கொடுத்த புகாரின் பேரில், மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

