/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் நிறுவன ஊழியரை வெட்டிய ஆறு பேர் கைது
/
தனியார் நிறுவன ஊழியரை வெட்டிய ஆறு பேர் கைது
ADDED : டிச 23, 2024 11:58 PM
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த, வல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப், 39. இவர், வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், மீஞ்சூர் அடுத்த, நாலுார் பத்மாவதி நகரைச் சேர்ந்த. சந்தியா, 43, என்பவருக்கும் பணம் கொடுக்கல் -- வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு, சந்தியாவின் துாண்டுதலின்படி, அவரது மகன் அஜித், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஜோசப்பின் வீட்டிற்கு சென்று அவரது கை மற்றும் தலையில் அரிவாளால் வெட்டினர்.
இதில், பலத்த காயம் அடைந்த ஜோசப், திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, நேற்று முன்தினம், சந்தியா, 43, அவரது மகன், அஜித், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று, இவ்வழக்கில் தொடர்புடைய, மீஞ்சூர் அடுத்த, நாலுார் பகுதியைச் சேர்ந்த தினேஷ், 28, ரிஷப், 21, காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரைச் சேர்ந்த மணிகண்டன், 35, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஷாம், 18, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு ஸ்விப்ட் கார், அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

