/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1.57 கோடி 'ஹவாலா' ஏர்போர்டில் பறிமுதல்
/
ரூ.1.57 கோடி 'ஹவாலா' ஏர்போர்டில் பறிமுதல்
ADDED : பிப் 26, 2024 06:43 AM

சென்னை: சென்னையில் இருந்து மும்பைக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணிக்க வந்தவர்களின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதித்தனர்.
இதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விக்கி ஜெகதீஷ் பாத்தியா, 48, என்பவர் கையில் எடுத்து சென்ற பையை சோதிக்க வாங்கினர்.
அவர், அதில் வெறும் பிஸ்கட் மற்றும் துணிகள் இருப்பதாக கூறினார்.
சந்தேகம் அடைந்த சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் துறை பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை 'ஸ்கேன்' செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரிந்தது.
பையை திறந்தபோது, அதன் அடிப்பாகத்தில் லைனிங் துணியில் ரகசிய அறை வைத்திருப்பதும், அதில் 13 பார்சல்கள் இருப்பதும் தெரிந்தது.
அதை பிரித்து பார்த்தபோது, 1.57 கோடி ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலர், சவுதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரை கைது செய்து, விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களின் விசாரணையில், அது ஹவாலா பணம் என தெரியவந்தது. இதையடுத்து, இதில் தொடர்புடையோர் குறித்து விசாரிக்கின்றனர்.

