/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணியால் பாதை மாயம் சாமந்தவாடா மக்கள் போராட்டம்
/
சாலை பணியால் பாதை மாயம் சாமந்தவாடா மக்கள் போராட்டம்
சாலை பணியால் பாதை மாயம் சாமந்தவாடா மக்கள் போராட்டம்
சாலை பணியால் பாதை மாயம் சாமந்தவாடா மக்கள் போராட்டம்
ADDED : டிச 24, 2025 05:54 AM

பள்ளிப்பட்டு: சாமந்தவாடா கிராமத்தை ஒட்டி இருந்த ஒத்தையடி பாதை, புதிதாக போடப்பட்டு வரும் ஆறுவழிச்சாலை பணியால் மாயமானது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் - ஆந்திர மாநிலம் சித்துார் வரை, பள்ளிப்பட்டு வழியாக ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், ஆறுவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில், சாமந்தவாடா கிராமத்தையொட்டி ஒத்தையடி பாதை இருந்தது.
இச்சாலை வழியாக சாமந்தவாடா கிராமத்தினர், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். தற்போது, இந்த பாதை சமன் செய்யப்பட்டு, ஆறுவழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதட்டூர்பேட்டைக்கு, பள்ளிப்பட்டு அல்லது கரிம்பேடு வழியாக 10 கி.மீ., சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாமந்தவாடா கிராம மக்கள் நேற்று, ஆறுவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கலைந்து சென்றனர்.

