/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய இருவருக்கு 'காப்பு'
/
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய இருவருக்கு 'காப்பு'
ADDED : செப் 27, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில், மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த டாஸ்மாக் அருகே, இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரித்ததில், மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த வசந்த், 19, பவன்ராஜ், 24, என தெரிந்தது. மேலும், அவர்கள் இருவரும், கத்தியுடன் அப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரும்பு கத்தி, ஆறு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

