/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடதில்லை சாலை படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை
/
வடதில்லை சாலை படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 18, 2025 02:42 AM

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் வடதில்லை கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.
ஊத்துக்கோட்டை - வேளகாபுரம் சாலையில், மாம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் முன், இடதுபுறம் சாலையில் வடதில்லை கிராமம் அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இந்த 3 கி.மீட்டர் துார சாலை மேடு, பள்ளமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் டயர்கள் பஞ்சராகி விடுகிறது.
பாதசாரிகள் நடப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வடதில்லை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

