ADDED : மார் 29, 2025 07:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:நாளை ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, திருத்தணி காந்தி ரோட்டில் இயங்கி வரும் மக்கா பள்ளி வாசல் மசூதி நிர்வாகம் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், 80 குடும்பத்தினருக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, முந்திரி, திராட்சை உட்பட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஜமாத் தலைவர் சுல்தான்பாய் தலைமையில் வழங்கப்பட்டது. ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஜமாத் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

