/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வன்னியர்களுக்கு உள்இட ஓதுக்கீடு ஆர்ப்பாட்டம்
/
வன்னியர்களுக்கு உள்இட ஓதுக்கீடு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, நேற்று, திருத்தணி ரயில் நிலையம் அருகே, வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, பாமக சார்பில், நகர செயலர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

