/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீயணைப்பு வீரர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீஸ் வலை
/
தீயணைப்பு வீரர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீஸ் வலை
தீயணைப்பு வீரர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீஸ் வலை
தீயணைப்பு வீரர் மீது தாக்குதல் நான்கு பேருக்கு போலீஸ் வலை
ADDED : அக் 28, 2025 10:48 PM
ஆர்.கே.பேட்டை:  பணி முடிந்து தோப்பில் ஓய்வில் இருந்த தீயணைப்பு வீரர் மீது, முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம், 31. இவர், சோளிங்கரில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணி முடித்து விட்டு வீடு திரும்பியவர், அவரது நண்பருடன் அம்மையார்குப்பம் தோப்பில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன், 38, பொன்னுரங்கம், 45, நடராஜன், 38, சபரீசன், 35, ஆகியோர், சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
ஆர்.கே.பேட்டை போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.