/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிட மக்களுக்கான திட்டம் ஆணைய உறுப்பினர் ஆலோசனை
/
ஆதிதிராவிட மக்களுக்கான திட்டம் ஆணைய உறுப்பினர் ஆலோசனை
ஆதிதிராவிட மக்களுக்கான திட்டம் ஆணைய உறுப்பினர் ஆலோசனை
ஆதிதிராவிட மக்களுக்கான திட்டம் ஆணைய உறுப்பினர் ஆலோசனை
ADDED : நவ 07, 2024 10:22 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணைய உறுப்பினர் ராம்சந்தர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். பட்டியல் இனத்தினர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன், எஸ்.பி., சீனிவாசபெருமாள், செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
பின், செய்தியாளர்களிடம் ஆணைய உறுப்பினர் ராம்சந்தர் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தும், பிரதம மந்திரி நல திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் மற்றும் வழக்குகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ஏதாவது
பாதிப்பு ஏற்பட்டால், ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்கொண்டுள்ள அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

