/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டுமனை பட்டா கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு
/
வீட்டுமனை பட்டா கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : டிச 19, 2025 06:21 AM
ஊத்துக்கோட்டை: குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கேட்டு கிராம மக்கள், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜிடம் மனு அளித்தனர்.
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் கிராம நத்தம் பகுதியில், 27 குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, ஆத்துப்பாக்கம் கிராமத்தில், நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், 'சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்' என்றார்.

