/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்
/
சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்
ADDED : அக் 27, 2025 12:57 AM

சோழவரம்: சேதமடைந்த மின்கம்பங்களால், கிருதலாபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு அடுத்த கிருதலாபுரம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. கம்பங்களில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பலத்த காற்று வீசும்போது, மின்கம்பங்கள் உடைந்து விழுந்து, மின் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. குடியிருப்புகள் அருகே சேதமடைந்துள்ள மின்கம்பங்களால், கிராம மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சோத்துபெரும்பேடு துணை மின்நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பெய்து வரும் பருவமழையால், புயல் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், உடனே புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

