/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவான 5 மையங்களில்...திடீர் ஆய்வு!:பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தொடர் கண்காணிப்பு
/
90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவான 5 மையங்களில்...திடீர் ஆய்வு!:பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தொடர் கண்காணிப்பு
90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவான 5 மையங்களில்...திடீர் ஆய்வு!:பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தொடர் கண்காணிப்பு
90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவான 5 மையங்களில்...திடீர் ஆய்வு!:பதற்றமான ஓட்டுச்சாவடிகள் தொடர் கண்காணிப்பு
ADDED : ஏப் 04, 2024 10:07 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், கடந்த தேர்தலில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப் பதிவான ஐந்து ஓட்டுச்சாவடிகளில், மாவட்ட தேர்தல் அலுவலர் திடீரென ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பதற்றமான 170 ஓட்டுச்சாவடிகள், தொடர் கண்காணிப்பில் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, மாதவரம், மதுரவாயல், அம்பத்துார் மற்றும் திருவொற்றியூர் ஆகிய, 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
திருவள்ளூர் தனி லோக்சபா தொகுதியில், திருவள்ளூர், பொன்னேரி கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி மற்றும் மாதவரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
திருவொற்றியூர் வடசென்னை லோக்சபா தொகுதியிலும், மதுரவாயல், அம்பத்துார் ஸ்ரீபெரும்புதுார் தொகுதியிலும், திருத்தணி அரக்கோணம் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 10 தொகுதிகளிலும், 34,22,814 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகரிப்பு
இத்தொகுதியில் நடந்த, 17 லோக்சபா தேர்தலிலும், 80 சதவீதம் ஓட்டுப்பதிவு கூட கிடைக்கவில்லை. கடந்த, 1951 தேர்தலில், 87.41 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, அதன்பின் அந்த அளவிற்குக்கூட, ஓட்டுகள் பதிவாகவில்லை.
கடந்த, 2009, 2014 தேர்தல்களில், ஓட்டுப்பதிவு சதவீதம் 72 சதவீதமாக இருந்தது. 2019ல் சற்று அதிகரித்து, 75.8 சதவீதமாக உயர்ந்தது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 2019ல் மொத்த ஓட்டுப்பதிவு, 75.8 சதவீதம் மட்டுமே. இருப்பினும், 5 ஓட்டுச்சாவடிகளில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவாகியது. இதில், நான்கு ஓட்டுச்சாவடிகள் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இதையடுத்து, இந்த ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
170 ஓட்டுச்சாவடிகள்
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் கடந்த, தேர்தலில் 90 சதவீத்திற்கு மேல் 5 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு பதிவாகி உள்ளது. இதில், நான்கு ஓட்டுச்சாவடிகள் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடி மற்றும் 90 சதவீதத்திற்கு மேல் பதிவான ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து வருகிறோம். பதற்றமான 170 ஓட்டுச்சாவடிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
கும்மிடிப்பூண்டி தண்டலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாலவாக்கம், எகுமதுரை, நாயுடுகுப்பம் ஆகிய ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டு, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். வரும் 19ல் நடைபெறும் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்று, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

