/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செவிலியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
/
செவிலியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
ADDED : டிச 28, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராமப்புற செவிலியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, கிராமப்பகுதி செவிலியர்களுக்கு சுகாதார துறை சார்பில், ஒரு நாள் பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் முன்னிலை வகித்தார்.
செவிலியர்களுக்கு, மகப்பேறு மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் நல பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள், பயிற்சி அளித்தனர்.

