/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு
/
ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு
ADDED : மார் 11, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்துள்ளது தொழுவூர் ஊராட்சி. இப்பகுதியில், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் இருந்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கு சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சகிலாரகுபதி மற்றும் வார்டு உறுப்பினர்கள், அப்பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் சவுடு மண் எடுத்தால் நீர்வளம் பாதிக்கும் என எதிர்ப்பு கூறி மணல் எடுக்கக் கூடாது என, தீர்மானம் நிறைவேற்றி அனைவரும் கையெழுத்திட்டனர்.

