/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் நிறுத்தப்படும் டிராக்டர்களால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
/
சாலையில் நிறுத்தப்படும் டிராக்டர்களால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
சாலையில் நிறுத்தப்படும் டிராக்டர்களால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
சாலையில் நிறுத்தப்படும் டிராக்டர்களால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம்
ADDED : நவ 07, 2025 12:33 AM

திருவாலங்காடு: திருவாலங்காடில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கரும்பு டிராக்டர்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
இங்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை, அரக்கோணம் உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
தினமும் 18 லட்சம் கிலோ கரும்பு அரவை செய்யப்படும் நிலையில், 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வாயிலாக கரும்பு வரவழைக்கப்படும்.
தற்போது கரும்பு ஏற்றி வந்த, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கரும்பு லோடுடன் ஆலை வளாகத்திலும், 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில் இருபுறமும் கரும்பு ஏற்றி வந்த வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் அவ்வழியே செல்லும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் விபத்து நிகழுமோ என அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் மட்டும் கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளிப்பட்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது கரும்பு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்பு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
லாரி மற்றும் டிராக்டர்களில் அனுப்புவதற்காக வயல்வெளியில் இருந்து கொண்டு வரப்படும் கரும்பு கட்டுகள், உரிய வாகனங்கள் வரும் வரை சாலையோரத்தில் இருப்பு வைக்கப்படுகின்றன.
கீச்சலம் அரசு உயர்நிலை பள்ளி எதிரே சாலையோரம் இருப்பு வைக்கப்படும் கரும்பு கட்டுகளால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளிக்கு நடந்து வரும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையோரம் நடந்து செல்ல வழியில்லாமல் தார் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக்கு எதிரே குறுகலான சாலையில் கரும்பு கட்டுகளை இருப்பு வைப்பதை, விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

